பாஜகவுக்கு சிவப்பு கம்பளம் விரித்த முதல்வர்: ஆர்.பி. உதயகுமார்

by Staff / 20-08-2024 11:37:53am
பாஜகவுக்கு சிவப்பு கம்பளம் விரித்த முதல்வர்: ஆர்.பி. உதயகுமார்

'Go Back Modi’ என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ‘Welcome Modi’ என வரவேற்கிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை தமிழ்நாட்டிற்குள் விட மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் ரூ.100 நாணயம் வெளியீட்டு விழாவின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via