சென்னையில் விடிய விடிய பரவலாக மழை தமிழகத்தில் கனமழை பெய்யவாய்ப்பு ! 

by Editor / 21-11-2023 07:48:54am
சென்னையில் விடிய விடிய பரவலாக மழை தமிழகத்தில் கனமழை பெய்யவாய்ப்பு ! 

சென்னையின் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அடையாறு, பாரிமுனை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் இரவுமுதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிய மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

 

Tags : சென்னையில் விடிய விடிய பரவலாக மழை! 

Share via