பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு - இபிஎஸ் கண்டனம்

by Staff / 17-05-2024 12:45:18pm
பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு - இபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 17) கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறியதாவது, “பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. போலீஸ் மீதான அச்சம் சிறிது கூட இன்றி இதுபோன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டுப் பாலியல் கொடுமை செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via