பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.
காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். நேற்று இரவு இவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்த நிலையில் ராகவேந்திரா நகர் பாலம் அருகே சென்றுள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர். அதன்பின்பு, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இந்த படுகொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :