கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டுதேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி

by Editor / 13-04-2025 10:57:21am
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டுதேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி

கிறிஸ்த வர்களின் தவக்காலத்தை முன்னிட்டு தேவாலயங்க ளில் இன்று (13ம் தேதி) குருத் தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

ஏசுவின் சிலுவைப் பாடுகளையும், உயிர்த்தெலுதலையும் தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக் கின்றனர். லெந்து காலம் என்றழைக்கப்படும் இந் நாட்களில் விருந்தோம்பலை தவிர்த்து விடுவர். இந் தாண்டுக்கான தவக்காலம் கடந்த மார்ச் 5ம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தவக் காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடை பிடிக்கப்படுகிறது.

இதன் துவக்க நாளான, இன்று (13ம் தேதி) குருத் தோலை ஞாயிறு அனுச ரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து ஜெருசேலம் நகரில் பவனியாக சென் றதை குறிக்கும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடி இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் விதமாக குருத்தோலை ஞாயிறு இன்று  குருத்தோலை திருப்பலி நடைபெற்றது - தவகாலத்தின்  புனித வாரம் இன்று தொடங்கியது,இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் நுழையும்போது அவருக்கு மக்கள் கொடுத்த ஆரவார வரவேற்பை எடுத்து கூறும் விதமாக குருத்தோலை பவனியில் ஈடுபட்டனர்-இதில் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குறுத்தோலை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்

 

Tags : கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டுதேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி

Share via