அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்க கூடாது: தயாநிதி மாறன் மனு.
முன்னாள் முதல்வரும்,எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டம் பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனும் பி.என்.எஸ்.எஸ். அமலுக்கு வரும் முன்பே அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னை விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடு பழனிசாமி தாக்கல் செய்த இந்த மனுவை ஏற்க கூடாது என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்க கூடாது: தயாநிதி மாறன் மனு



















