இரணியல் அருகே ரெயில் முன் பாய்ந்து கண்டக்டர் தற்கொலை

இரணியல் அருகே ரெயில் முன் பாய்ந்து கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் வள்ளியாற்று பாலம் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.
சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபரின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்றும் நின்று கொண்டிருந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடப்பது கொற்றியோடு சரல்விளையைச் சேர்ந்த காட்வின்ஜோஸ் (வயது 27) என்பது தெரிய வந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்த இவர், மினி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து காட்வின் ஜோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பலியான காட்வின் ஜோசின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.
Tags :