இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

by Editor / 09-03-2023 08:13:35am
இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளி) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via

More stories

Logo