வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல். 

by Editor / 08-03-2023 10:34:19pm
வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல். 

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானாவிழும் மர்ம  காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் இதுவரை 20 ஆயிரம் பேருக்கும், தெலுங்கானாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த காய்ச்சலுக்கு எவ்வளவுபேர் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என அறிவிக்கபட வில்லையெனிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்,ஆரம்ப சுகாத்ரா நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது.சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பலர் அவதிப்படுகின்றனர். இன்புளுவன்சா வைரஸில் உள்ள துணை வேரியண்டின் தாக்கத்தால் இந்த காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கைகளை சுத்தமாக வைத்திருக்கவும், மூக்கு மற்றும் வாயை அதிகம் தொடக்கூடாது, ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸைப் போலவே இந்தவைரஸ் காய்ச்சலும் வேகமாகப் பரவுகிறது.
 

 

Tags :

Share via