தினமும் சுமார் ரூ.1,600 கோடி வருமானம்

by Editor / 21-09-2022 11:07:11pm
தினமும் சுமார் ரூ.1,600 கோடி வருமானம்

கவுதம் அதானி கடந்த ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1,600 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார் என்று ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது. ஐஐஎப்எல் வெல்த் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2023-யின் படி கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு அதானி ரூ.1,612 கோடி சம்பாதித்து உள்ளார். இதன் மூலம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.10,94,400 கோடியாக உள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானியை விட 3 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்துள்ள அதானி குழுமம் இந்த துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via