65.46 கிலோதங்கக் கட்டிகள் பறிமுதல்

by Editor / 21-09-2022 11:10:39pm
65.46 கிலோதங்கக் கட்டிகள் பறிமுதல்

மிசோரம் மாநிலத்தில் இருந்து  தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. தங்கம் கடத்தலை தடுக்க வருவாய்த்துறை புலனாய்வு இயக்குனரகம் மூலம் 'ஆபரேஷன் கோல்ட் ரஷ்' தொடங்கப்பட்டது. இந்த குழு முதற்கட்டமாக கடந்த 19-தேதி மராட்டிய மாநிலம் பிவாண்டியில், சரக்கு பெட்டகங்களை ஆய்வு செய்தது. அப்போது 20 கிலோ எடையுள்ள 120 வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 10.18 கோடி ரூபாய் ஆகும். அதே போல் இரண்டாவது சரக்கு பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டது.

லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் கிடங்கில் ஆய்வு செய்ததில் சுமார் 28.57 கிலோ எடையும், 14.50 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட 172 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் டெல்லியில் கடத்தப்பட இருந்த 17 கிலோ எடை கொண்ட 102 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 8.69 கோடி ரூபாய் ஆகும். மொத்தமாக 65.46 கிலோ எடையும், தோராயமாக 33.40 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via