எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய  வழக்கில் ஒருவர் கைது

by Editor / 24-07-2021 05:54:14pm
 எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய  வழக்கில் ஒருவர் கைது

 


சிறப்பு எஸ்.ஐ., வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொருவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.


கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புத்தன்சந்தை கல்லுப்பாலத்தை சேர்ந்த செலின்குமார்.இவர், களியக்காவிளையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஜூலை 3ஆம் தேதி அதிகாலை 2:40 மணியளவில் இவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் ஆகியவை தீப்பற்றி எரிந்தது.இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து செலின்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் அவரின் வீட்டிலும், அண்டை வீடுகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன.


இதனால், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.விரோதத்தால் குண்டுஎஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள்இந்நிலையில், அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையிலான காவலர்கள் மார்த்தாண்டம் பகுதியில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பெட்ரோல் குண்டு வீசிய அருண் என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.


பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியபோது, வழக்கொன்றில் உதவி ஆய்வாளர் மீது ஏற்பட்ட விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதாக கூறினார். மேலும், தப்பி ஓடிய விஜயலால் என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via