ரயில் மோதி பெண் ஒருவர் பலி.

கோவை இருகூர்-போத்தனூருக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அருகே பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags :