காங்கோவில் மழை பேரழிவு.. 60 பேர் பலி

by Staff / 30-12-2023 01:51:17pm
காங்கோவில் மழை பேரழிவு.. 60 பேர் பலி

காங்கோவில் மழை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். காங்கோவின் தெற்கு கிவு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories