லிஃப்டில் 30 நிமிடங்கள் சிக்கிய குழந்தைகள், பெண்கள்

by Staff / 17-12-2022 12:39:29pm
லிஃப்டில் 30 நிமிடங்கள் சிக்கிய குழந்தைகள், பெண்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள பஞ்சசீல் ஹைனிஷ் சொசைட்டியில் 7 பேர் லிஃப்டில் சிக்கிக்கொண்டனர். மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் பள்ளியில் இருந்து திரும்பும் போது லிஃப்டில் சிக்கி போராடினர். சுமார் அரை மணி நேரம் கழித்து, சம்பவ இடத்துக்கு வந்த பராமரிப்புத் துறை ஊழியர் லிஃப்டை திறந்து அவர்களை வெளியே மீட்டார்.லிஃப்டில் சிக்கிக் கொண்ட பெண்கள் அவசரகால பட்டனை பலமுறை அழுத்தியும், யாரும் உதவிக்கு வரவில்லை என தெரிவித்தனர். பராமரிப்பு துறை ஊழியர் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கும். முறையான லிஃப்ட் பராமரிப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories