தமிழகத்தில் 10கல்லூரிகள் துவக்கம்.அமைச்சர் தகவல். தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்குள் புதியதாக 10 கல்லூரிகள் துவங்கப்படும்

by Editor / 06-01-2022 04:05:34pm
தமிழகத்தில் 10கல்லூரிகள் துவக்கம்.அமைச்சர் தகவல்.  தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்குள் புதியதாக 10 கல்லூரிகள் துவங்கப்படும்

தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்குள் புதியதாக 10 கல்லூரிகள் துவங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்: இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படுமா  என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே போதுமான அளவில் கல்லூரிகள் செயல்பட்டு வருவதால் ஓட்டப்பிடாரத்தில் புதியதாக கல்லூரி துவங்க அவசியமில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில்  கல்லூரி அமைக்க அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் அடுத்த ஆண்டுக்குள் புதியதாக்க 10  கல்லூரிகள் தமிழகத்தில் துவங்கப்படுமென அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via