சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்

by Editor / 11-04-2022 01:47:19pm
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும்

2016ல் அதிமுக  பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாஅதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து 2017 பொதுக்குழுவில் நீக்கம் செய்யப்பட்டார்.2017 பொதுக்குழுவில் தன்னை  நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து அதனை  ரத்து செய்யவேண்டுமெனக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அவர்  வழக்குத்தொடர்ந்தார்.இந்த வழக்கை  எதிர்த்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று கூறி  தீர்ப்பளித்தது. 

 

Tags :

Share via

More stories