ஜாமீனில் வெளிய வந்தவரை வெட்டிய 3 பேர் கைது

by Staff / 28-09-2023 03:50:18pm
 ஜாமீனில் வெளிய வந்தவரை வெட்டிய 3 பேர் கைது

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 27). இவரை ஒரு கஞ்சா வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (28). ஒரு வழக்கில் கிச்சிப்பாளையம் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். சிறையில் இருந்த போது யார் பெரியவர்? என்பதில் ஏற்பட்ட மோதலில் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு, சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் நாராயண நகரை சேர்ந்த பிரேம்குமார் (22), பச்சப்பட்டியை சேர்ந்த கார்த்தி (22) ஆகிய 3 பேரும் சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விஜய் நின்று கொண்டிருப்பதை பார்த்த, சூர்யா அவரை அழைத்து உள்ளார். விஜய் அங்கு சென்ற போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா உள்பட 3 பேரும் சேர்ந்து அரிவாளால் விஜயை வெட்டினர். காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவர்கள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று மீண்டும் வெட்டினர். இதில் தலை, கை, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo