இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள்" – மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

by Editor / 13-03-2025 01:38:12pm
இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள்

மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், "இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள்" எனக் கூறி மத்திய அரசை கண்டித்தார்.தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு என தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுக்க இன்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். முந்தைய ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகாலம் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நலன்களை டெல்லியில் அடகு வைத்தார்கள். தமிழக உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறார்கள்..
ஒன்றிய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம். வாதாடியும், போராடியும் நமது உரிமைகளை நிலைநாட்டுவோம். மத்திய அரசு அனைத்து வகையிலும் நமக்குத் தடைக்கல்லை போட்டு வருகிறது.

 

Tags :

Share via