பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் கைது

by Staff / 30-12-2023 02:58:45pm
பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் கைது

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மணிக்கட்டியூர் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டினுள் ஒரு பெண்ணுடன் 2 இளைஞர்கள் இருந்தனர். போலீசாரை கண்டதும் இளைஞர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது புரோக்கரான பாக்யா என்பவர் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் பாக்யாவை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo