அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிர் ஆயுத சோதனை இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக அமெரிக்க கடற்படை தகவல்

by Staff / 22-04-2022 01:38:12pm
அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிர் ஆயுத சோதனை இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக அமெரிக்க கடற்படை தகவல்

அதிக ஆற்றல் கொண்ட லேசர் கதிரை கொண்டு குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ராணுவ சோதனை அமெரிக்க கடற்படை வெற்றிகரமாக செய்து பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சோதனை மையத்தில் நடந்த இந்த சோதனையில் சப்சனிக்கு  எனப்படும் மணிக்கு 950 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லும் ஏவுகணையை பிரதிபலிக்கும் வகையில் பறக்கவிடப்படும் ஒன்றின் இன்ஜினை மின்சாரம் மூலம் உருவாக்கப்பட்ட லேசர் கதிர் துல்லியமாக தாக்கி செயலிழக்க செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய லேசர் கதிர்கள் ரசாயனங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது காயில் கண்ணாடி ஆப்டிகல் பைபர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இலக்கை பொருத்தும்  லேசர் கதிரின் ஆற்றலை மாற்றி அமைத்து தாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண ராணுவ தளவாடங்களின் உள்ளதைப்போல வெடிபொருள்கள் இதில் தேவையில்லை என்பதால் லேசர் கதிர் ஆயுதங்களை பயன்படுத்துவதும் சுலபம் எனவும் அவை இயக்க மின்சாரம் மட்டும் போதும் என்பதால் செலவு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via