பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை 80 இலட்சம் வரை இலஞ்சப்பணம் பறிமுதல்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீபாவளிப்பண்டிகை நெருங்கிவருவதால்அரசு அலுவலகங்களில் வசூல்வேட்டைகள் தீவிரமாக நடந்துவருவதை முன்னிட்டு இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனைகளை நடத்திவருகின்றனர்.விபரம் வருமாறு;
நாகர்கோவிலில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விஜய சண்முகம் மற்றும் டாஸ்மாக் டிவிசன் மானேஜர் தங்கியுள்ள விடுதி அறையில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் அங்கு கணக்கில் வராத 1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கோவில்பட்டி உப கோட்ட ஊராக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கரிடம் இருந்து கணக்கில் வராத 6 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பறிமுதல்.
திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் திடீர் சோதனையில் கணக்கில் வராத 70 லட்ச ரூபாய் பறிமுதல்,
ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை- 1லட்சத்து 1000ரூபாய் பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
நாகை ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல்.
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் திட்ட பொறியாளர் பிரிவில் இருந்து ரூ 40 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல்.
தமிழக ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
கோபிசெட்டிப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் 1 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்.
தருமபுாி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள நுகா்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் தருமபுாி இலஞ்ச ஒழிப்பு துறையினா் டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் 10க்கும் மேற்பட்டோா் தற்போது சோதனை.
நாகை ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவல வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை.இன்னும் பல்வேறு அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் இதுவரை 80இலட்சம் ரூபாய்வரை சிக்கியுள்ள நிலையில் சுமார் 1 கோடிரூபாய் வரை இலஞ்சப்பணம் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags :