ஆபாச படம் காட்டி டாக்டரை மிரட்டிய 2 இளம்பெண்கள் கைது

by Admin / 03-03-2022 03:03:01pm
ஆபாச படம் காட்டி டாக்டரை மிரட்டிய 2 இளம்பெண்கள் கைது

கேரள மாநிலம் திருச்சூரில் டாக்டர் ஒருவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு முன்பின் தெரியாதவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதற்கு அவர் பதிலளித்து உள்ளார்.
 
அதை தொடர்ந்து அந்த எண்ணிலிருந்து மீண்டும் தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண் டாக்டரிடம் சிகிச்சை தொடர்பாக சந்தேகம் கேட்பது போல ஆபாசமாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி டாக்டரின் செல்போனுக்கு அதிக அளவில் ஆபாச படங்களை அனுப்பி உள்ளார்.

பின்னர் டாக்டர் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுக்க உள்ளதாகவும் புகார் கொடுக்காமல் இருக்க ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் துபாயில் இருந்து ஒருவர் டாக்டரை போனில் அழைத்து மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் டாக்டரை மிரட்டிய 2 பேர் திருச்சூர் மன்னூத்தி பகுதியைச் சேர்ந்த நவுபியா (வயது 33) மற்றும் அவரது தோழி நிஷா (29) என தெரியவந்துள்ளது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். துபாயிலிருந்து டாக்டருக்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo