நியூசிலாந்தில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by Staff / 16-03-2023 01:21:57pm
நியூசிலாந்தில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் வியாழன் மாலை அந்நாட்டு நேரப்படி 06:25:58 மணிக்கு 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் -30.34 அட்சரேகை மற்றும் -175.17 தீர்க்கரேகையில் 41 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது. கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 300 கிலோமீட்டர் சுற்றளவில் சுனாமி ஏற்படலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் ஏதும் பதிவாகியுள்ளதாக என்ற தகவல் வெளியாகவில்லை.

 

Tags :

Share via