பணி செய்யும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான சோமன், இவர் சிவானந்த காலனி அடுத்த தாகூர் வீதியில் விஜயகுமார் என்பவரது வீட்டில், கடந்த 8 ஆண்டுகளக, காவலாளியாக வேலை செய்து வருகிறார், இந்த நிலையில், வழக்கம் போல, நேற்று வேலைக்கு வந்த சோமன், பணி செய்யும் வீட்டில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனை பார்த்த, அங்கு பணியாற்றி வந்த மற்றோரு ஊழியரான, தங்கவேல் என்பவர் வீட்டின் உரிமையாளரான விஜய சேகருக்கு தகவல் தெரிவித்தார், தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு வந்த விஜய் சேகர் இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் சோமனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :