14 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
நாமக்கல்: பரமத்திவேலூரில், 14 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்ததாக 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரசாத்குமார் என்பவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனைப் பார்த்த சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
Tags :



















