முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் புதிய கட்சியை துவங்குகிறார் அவரது தோழி சசிகலா.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா பிப்ரவரி 24 2026 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்கான முன் முயற்சியாக பசும்பொன்னில் உள்ள கோட்டைமேடு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடந்தது. இந்த புதிய கட்சி தொடக்க விழாவின் பொழுது சசிகலா புதிய கட்சியின் பெயர் கொடியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் 40 தொகுதிகளுக்கு மேல் தமது ஆதரவாளர்களை களம் இறக்க உள்ளதாக தகவல்.
Tags :













.jpg)




