எண்ணெய் பலகாரங்கள் செய்வதற்கு முன்
எண்ணெய் பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் காறல் இல்லாமல் இருக்க கொதிக்கும் எண்ணெயில் கொஞ்சம் புளியை சேர்த்து கரியவிட்டு பின் எடுத்துத் தூக்கிப் போட்டு விடுங்கள். அதன் பின்பு உணவுப் பண்டங்களை பொரித்து எடுத்தால் காறல் இருக்காது.முறுக்கு பிழிய மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசையாமல், நீராவியில் வேக வைத்து எடுத்து தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் நெய் கூடுதலாக கலந்து பிசைந்து முறுக்கு பிழிந்து பாருங்கள் கரகரப்பாக, டேஸ்ட்டியாக இருக்கும்.பூரி சுடுவதற்கு கோதுமை மாவு பிசையும் பொழுது அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து எடுத்தால் நீண்ட நேரம் பூரி நமத்துப் போகாமல் அப்படியே புசுபுசுன்னு இருக்கும்.
Tags :