நெல்லையப்பர் தேர் திருவிழா தேர் சுத்தம் செய்யும் பணி  நடைபெற்றது.

by Staff / 22-06-2025 10:28:44am
 நெல்லையப்பர் தேர் திருவிழா தேர் சுத்தம் செய்யும் பணி  நடைபெற்றது.

ஆசியாவிலேயே சுமார் 570 டன் எடை உடையஅதிக எடை கொண்ட தேர் சுவாமி நெல்லையப்பர் கோவில் தேர் ஆகும். நெல்லை ரதவீதிகளில் ஐந்து தேர்கள் ஓடும் தேர் திருவிழா வரும் ஜூலை எட்டாம் தேதி நடைபெற உள்ளது திருவிழாவில் தொடக்கமாக கொடியேற்றம் வரும் ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நெல்லையப்பர் கோவிலில் திருவிழாவிற்கான  ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பந்தல் அமைக்கும் பணி விளக்குகள் அமைக்கும் பணிகள்,, உள்ளிட்டவைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தேர் சுத்தம் செய்யும் பணி தீயணைப்பு துறையினரின் உதவியுடன்  மேற்கொள்ளப்பட்டது. 

தேர் சுத்தம் செய்யும் பணிக்காக பிரத்தியேக அனுமதி பெற்று நெல்லை நகர் தீயணைப்பு நிலையத்தின் அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்   28 அடிக்கு 28 அடி அகலம் கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரை தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து தேரை  சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

 

 

Tags :  நெல்லையப்பர் தேர் திருவிழா தேர் சுத்தம் செய்யும் பணி  நடைபெற்றது.

Share via