குற்றாலத்தில் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற திருநங்கைகளின் முக்கிய சடங்கு நிகழ்வான இல்ல பால் ஊற்றும் விழா
தென்காசி மாவட்டம் நன்னகரம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமாக திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
திருநங்களைகளில் முக்கிய நிகழ்வாக இல்ல பால் ஊற்றும் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த இல்ல பால் ஊற்றும் விழாவானது,ஆணாக பிறந்து வளர்ந்து முழுமையாக பெண்ணாக மாறிட அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு இல்ல பால் ஊற்றும் விழா என்ற சடங்கு நடத்துவது வழக்க்கம்
அந்த வகையில், குற்றாலத்தில் திருநங்கையர்களின் முக்கிய சடங்கான பால் ஊற்றும் நிகழ்வு மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்றது. குற்றாலம் மெயின் அருவியில் 2 திருநங்கைகளுக்கு நடைபெற்ற இந்தநிகழ்வில் திருநங்கைகள் முகத்தை மூடி அருவிநீர் செல்லும் பகுதிவரை அழைத்து செல்லப்பட்டு சடங்கு விழா நடைபெற்றது.
ஆட்டம் பாட்டத்துடன் குற்றாலத்தில் நடைபெற்ற திருநங்கைகளில் சடங்கு நிகழ்வை சுற்றுலா பயணிகளில் ஆர்வத்தை ஈர்த்தது. மேலும் இந்நிகழ்வையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
Tags :