தலைமை ஆசிரியர் மாணவிகளை தவறாக பேசி கண்டித்ததாக மாணவிகள் போராட்டத்தால் பரபரப்பு
செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென மாணவிகள் மயங்கி விழுந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மாணவிகளை தவறாக பேசி கண்டித்ததாக மாணவிகள் போராட்டத்தால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு வகுப்பறையில் ரசாயன பாட்டில் விழுந்து உடைந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கம் அடைந்து கிழே விழுந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ரசாயன பாட்டில் உடைந்து விழுந்து எவ்வாறு மயக்கம் ஏற்பட்டது என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் மாணவிகள் ரசாயன பொருட்களை பயன்படுத்தியதாகவும் அதன் வாயிலாகவே மயக்கம் ஏற்பட்டதாக மாணவிகளை தலைமையாசிரியர் தமிழ் வாணி கண்டித்ததாக கூறப்படுகிறது
இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் தமிழ் வானி பேச்சை கண்டித்து மாணவிகள் நூற்றுக்கும் பள்ளியின் நுழைவாயில் செல்லும் பகுதி முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தலைமை ஆசிரியர் தமிழ் வாணியை மாற்ற கோரியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் பாலமுருகன் மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். மாணவிகளின் திடீர் போராட்டம் செங்கோட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Tags : There was a stir due to the protest of the female students who said that the headmaster had reprimanded the female students