புத்தர் என்ற முதல் பகுத்தறிவுவாதி பிறந்த நாள் சிந்தனைகள்
இன்று புத்தரின் பிறந்த நாள்.
சித்தார்த்தனாகவளர்ந்தவர் 'சமூகப் புரட்சியாளராக' சுமார்2500 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மத்தியில்பரப்புரை செய்து தனது (அக்காலசுயமரியாதை) இயக்கத் தினைத் தொடங்கிதனது கொள்கை லட்சியங்களை ஒருமார்க்கமாக, வாழ்க்கை முறையாக (way of life) பரப்பினார். அதனால் 'புத்தர்' ஆனார்.
ஆரியத்தின்சனாதனத்தை, வர்ண தர்மத்தை, பெண்ணடிமையைஎதிர்த்த இந்திய வரலாற்றின் முதல்பகுத்தறிவுவாதி!
உண்மையானபவுத்தக் கொள்கைப்படி,
(1) கடவுள் இல்லை . (2) ஆத்மா இல்லை . 3 ஜாதி இல்லை . காரணம் அவைகளால்தான் மனிதரைப் பிரிக்கின்ற மேல் , கீழ் என்ற பிராமண - சூத்திர - பஞ்சம ஜாதி முறைகள் அற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க நினைத்தார் !(2) மக்கள் மொழியாகிய ' பாலி ' மொழியில் தனது பரப்புரைகளை நடத்தினார் ; சமஸ்கிருதம் என்ற ' தேவபாஷையை ' அவர் தேர்ந்தெடுக்கவில்லை !
(3) வேத மறுப்பும் , கல்விப் பரப்பும் , பகுத்தறிவும் பிரச்சாரமும்தான் அவரது முக்கிய அந்நாளைய பணியாகும் !
முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக பின்பற்றாதே !முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக ஏற்காதே !
முன்னோர்கள் நடந்தார்கள் என்பதற்காக அதனை ஒப்பாதே !உன் பகுத்தறிவுப்படி சிந்தித்து செயல்படு என்றார் .
" புத்தன் என்றால் புத்தியைப் பயன்படுத்துபவன் " என்று எளிய விளக்கம் தந்தார் தந்தை பெரியார் அவர்கள் !
அம்பேத்கர் தழுவியது ' நவயானா பவுத்தம் ' மறவாதீர் ! ஆரிய சனாதனத்திற்கு எதிரானது .புத்த மார்க்கத்தில் நுழைந்து , அதனைப் பிளந்து , திரிபுவாதம் செய்து பல பிரிவுகளாக்கி , புத்தரையே 9 ஆவது விஷ்ணு அவதாரமாக்கி , அணைத்து ஒழித்து விரட்டி அழித்தது ஆரியம் - மறவாதீர் !புரிந்து கொள்வீர் !
ஆரியத்தை விரட்டுவதே உண்மையான புத்தம் - பகுத்தறிவு நெறி .அதுதான் இன்றைய " திராவிடத்தின் " ஒரே பணி .
கி . வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம்
Tags :