அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீண்டகால அறிவியல் ரீதியான ஆபத்து கண்டறிதல் முடிவை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீண்டகால அறிவியல் ரீதியான ஆபத்து கண்டறிதல் முடிவை பசுமை இல்லா வாயுக்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்கிற முடிவை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். ஒபாமா காலத்தில் கொண்டு வரப்பட்ட அதிக வாகன உமிழ்வு மற்றும் மைலேஜ் தர நிலைகள் இதன் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. பசுமை இல்லாவாயுக்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்ற 2009 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் கண்டுபிடிப்பை இது மாற்றி அமைக்கிறது. இந்த முடிவு கலிபோர்னியா உள்ளிட்ட பல மாகாணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்களால் நீதிமன்றத்தில் எதிர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கார் உற்பத்தியாளர்கள் குறைந்த செலவில் வாகனங்களை தயாரிக்க இது வடிவமைக்கும் என்று நிர்வாகம் வாதிட்டாலும் சர்வதேச சந்தை போட்டியில் ,இது அமெரிக்க நிறுவனங்களை பின்னுக்கு தள்ளும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
Tags :


















