சென்னையில் ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது

by Staff / 04-12-2023 05:36:25pm
சென்னையில் ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது

சென்னை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கே - வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் நெல்லூர் - மசூலிப்பட்டினத்திற்கு இடையே நாளை கரையைக் கடக்கிறது. இதனிடையே சென்னை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டது. மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு நகர்ந்த நிலையில், படிப்படியாக மழை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரை நோக்கி புயல் சென்றுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories