செந்தில் பாலாஜியிடம் தொடரும் விசாரணை
புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். வாடிய முகம், தாடி என ஆளே மாறிப்போயிருந்தார். அங்கு அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற இந்த விசாரணையை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்பதற்கு 200 கேள்விகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தினமும் 50 கேள்விகள் வீதம் கேள்விகள் கேட்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :