கமுதி பேரூராட்சியில் 11 வார்டுகளில் சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு

by Editor / 07-02-2022 08:43:51pm
 கமுதி பேரூராட்சியில் 11 வார்டுகளில் சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் மொத்தம்  15 வார்டுகள் உள்ளன. இதில் 15 வார்டுகளுக்கு 46 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை முடிந்து  இன்று மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாள் என்பதால் கமுதி பேரூராட்சியில் 1, 4, 5, 7, 8, 10, 11,12, 13, 14, 15 ஆகிய (11) வார்டுகளின் போட்டியிட்ட உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாபஸ் நிலையில் 4 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்  திமுக போட்டியிடவில்லை. அதிமுக ஒரு வார்டில் மட்டும் போட்டியிடுகிறது. 4 வார்டுகளில் பாஜக போட்டியிட்டாலும் 14 வது வார்டில் பாஜக சார்பில் சத்யா என்ற பெண் வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

 கமுதி பேரூராட்சியில் 11 வார்டுகளில் சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு
 

Tags : கமுதியில் 11 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு

Share via