ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது - உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த மாணவன் யுவராஜ் தற்கொலை செய்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், ₹10 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் கலா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ‘ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால், எவ்வித ஆதாரமுமின்றி, ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது. பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் அவர்களை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என தீர்ப்பளித்துள்ளார்.
Tags :