தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடலுக்கு  அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார்  ரஜினி

by Editor / 28-12-2023 10:09:01pm
 தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடலுக்கு  அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார்  ரஜினி

 மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  நடிகர் ரஜினிகாந்த் காலை 7:30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக, தூத்துக்குடியில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த அவர், விஜயகாந்தின் இறப்பு செய்தியை கேட்டு படப்பிடிப்பை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.  காலை, தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு திரும்பியவுடன் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு  அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார்  ரஜினி

Share via