குமரி-திருவனந்தபுரம் 5 ரெயில்கள் ரத்து-தென்னகரயில்வே தகவல்.

by Editor / 29-01-2023 08:19:43pm
குமரி-திருவனந்தபுரம் 5 ரெயில்கள் ரத்து-தென்னகரயில்வே தகவல்.

தென்னகரயில்வே மதுரைக்கோட்டம் சார்பில் வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: -திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பிரிவில் இரட்டை ரெயில் பாதை திட்டப்பணி நடைபெற உள்ளது. இதை யொட்டிரெயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி கொல்லம் ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலும், கன்னியாகுமரியில் இருந்து கொல்லத்துக்கு இயக்கப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலும் பிப்ரவரி 4, 5, 6, 7, 8, 9, 14 மற்றும் 15-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

புனலூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 14, 15, 16 மற்றும் 17-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி-புனலூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 14, 15, 16 மற்றும் 17-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 14, 15 மற்றும் 17-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி இடையே யும், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் இடையேயும் இயக்கப்படும் திருச்சி சூப்பர் பாஸ்ட் எக்ஸ் பிரஸ் ரெயில் பிப்ரவரி 4, 5, 6, 7, 8, 9, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம்- திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4, 5, 6, 7, 8, 9, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாகர்கோ வில்-மங்களூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிப்ரவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் திருவனந்தபு ரம்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரியில் இருந்து கே. எஸ். ஆர். பெங்களூரு இடையே இயக்கப்படும் ரெயில் பிப்ரவரி 14 மற்றும் 17-ந்தேதி களில் கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

புனேயில் இருந்து கன்னி யாகுமரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 12, 15– ந்தேதிகளில் பாறசாலை-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

கே. எஸ். ஆர். பெங்களூரு - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 13, 16-ந்தேதிகளில் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி-ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி காட்ரா வாராந்திர ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 17-ந்தேதி பகல் 2. 15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில் 50 நிமிடம் தாமதமாக 3. 05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via