சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கத் தொடங்கியது பாஜக.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமைப்பாளர், இணை அமைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த தொகுதிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், பாஜக தனது கட்சி பொறுப்புகளில் அதிரடி மாற்றம் செய்து வருகிறது.
Tags : சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கத் தொடங்கியது பாஜக.