இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை

by Staff / 31-08-2023 01:34:09pm
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதே போல், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo