இந்தியா மற்றும் மலேசிய இடையிலான 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

by Admin / 09-02-2026 02:13:23am
 இந்தியா மற்றும் மலேசிய இடையிலான 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட் பயணமாக மலேசியா சென்றிருந்தார். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை குறை கடத்திகள் பாதுகாப்பு மற்றும் பல முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடப்பட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். உலகளாவிய விநியோக சங்கிலியை வலுப்படுத்தவும் குறை கடத்தி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின. பயங்கரவாத எதிர்ப்பு ,உளவு தகவல்களை பகிர்தல் மற்றும் கடல் சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு நடவடிக்கை, சுற்றுலாக்கான கட்டணம் இல்லா மின் விசா, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி காக்கும் படையில் ஒத்துழைப்பு மற்றும் உயர் கல்வி போன்ற துறைகளிலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் உள்ள யூ .பி. ஐ மற்றும் மலேசியாவின் பே நெட் ஆகியவற்றுக்கு இடையே நிதி ,தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா மற்றும் மலேசிய இடையிலான உறவு விரிவான கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது..

 இந்தியா மற்றும் மலேசிய இடையிலான 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 

Tags :

Share via

More stories

Logo