காவல் நிலையத்திலேயே வேலையைக் காட்டிய வாலிபர்

by Staff / 26-11-2022 12:49:25pm
காவல் நிலையத்திலேயே வேலையைக் காட்டிய வாலிபர்

எர்ணாகுளம் அருகே போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அப்போது, அவர்கள் பிடிபட்ட இடத்தில் இருந்து திருக்காக்கரை போலீசார் பைக் ஒன்றையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு உரிய வகையில் மற்றொரு வாகனமும் உரிமையாளர் இல்லாமல் நின்றதால் அதனையும் போலீசார் எடுத்துச்சென்றனர். சோதனையில், அந்த வாகனத்தின் எண் போலியானது என தெரியவந்தது. ஏற்கனவே விபத்தில் சிக்கி பழுது பார்க்கும் மையத்தில் கிடக்கும் வாகனத்தின் எண்ணை பைக்கில் பொருத்து பயன்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக போலி எண்ணை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், வாகனத்தையும் காவல் நிலையத்தில் இருந்துஅல் அமீன் (24) என்பவர் திருடிச் சென்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், குற்றவாளியை திரிக்காகர போலீசார் கைது செய்தனர்.
மேலும், பைக்கின் இன்ஜின் எண் மற்றும் சேஸ் எண் மூலம் உண்மையான உரிமையாளரை அடையாளம் காண, அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo