நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் - நோயாளி மரணம்

by Staff / 26-11-2022 12:46:28pm
நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் - நோயாளி மரணம்

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 40 வயதுடைய தேஜியா என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் மயங்கி விழுந்ததால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பன்ஸ்வாராவில் இருந்து ரத்லம் சாலையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது, ஆம்புலன்ஸ் பாதி வழியில் நின்றது.

டீசல் தீர்ந்து போனதால் நடுரோட்டில் நின்ற ஆம்புலன்சை சிறிது தூரம், உறவினர்களும், பொதுமக்களும் தள்ளினர். இதனிடையே வேறு ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து, நோயாளி தேஜியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது.ஆம்புலன்ஸ் நிர்வாகம் சரியான பராமரிப்பு கூட செய்யாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்டதே ஒரு உயிர் பறிபோகக் காரணம் என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
 

 

Tags :

Share via