தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் பதவி
பரபரப்பான தமிழக அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையில் தமிழக வெற்றி கழகத்தில் விஜயை முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா உள்பட அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர். விஜய் மிகுந்த சந்தோசத்தோடு செங்கோட்டையனை கட்சி துண்டு அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் பதவியுடன் கொங்கு மண்டல நான்கு மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 50 ஆண்டுகால அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுகவை விட்டு முதல் முறையாக வேறு கட்சிக்கு தாவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு செங்கோட்டை குறித்து புகழாரம் சூட்டி உள்ளார்.
Tags :


















