மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை

by Editor / 15-05-2022 07:55:11pm
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர்  மர்ம கும்பலால்  வெட்டிப் படுகொலை

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செம்பருத்தி மேடு பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் மகன் சுகுமாரன் (48). இவர் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். இவரை காரில் வந்த மர்ம கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டது. கல்லிடைகுறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo