செல்போன் பறிக்க முயற்சி - பெண் உயிரிழப்பு
சென்னையில் ஜூலை 2 ஆம் தேதி அன்று இந்திராநகர் ரயில் நிலையம் அருகே இருவர் செல்போன் பறிக்க முயன்றபோது, இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ப்ரீத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் படுகாயமடைந்த பெண் பிரீத்தி (வயது 23) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து செல்போனை பறிக்க முயன்ற விக்னேஷ், மணிமாறன் இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags :



















