தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டஆளுநர் ஆர்.என்.ரவி

by Editor / 11-10-2024 11:08:29am
தனியார் மருத்துவமனையில்  மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி (72), பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. சில பரிசோதனைகள் செய்த பின், மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். வழக்கமான பரிசோதனைக்காக ஆளுநர் வந்து சென்றதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags : தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டஆளுநர் ஆர்.என்.ரவி

Share via
Logo