டாஸ்மாக்கில் ஓட்டையை போட்டு ஆட்டையை போட்டு சிக்கி கொண்ட திருடர்கள்

by Editor / 04-09-2022 10:58:29pm
டாஸ்மாக்கில் ஓட்டையை போட்டு ஆட்டையை போட்டு சிக்கி கொண்ட   திருடர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு போலீசார் ரோந்து பணியின் போது கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே அமர்ந்து மர்ம நபர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14000ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் மது பாட்டில்களையும், திருடி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கவரைப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். டாஸ்மாக் கடையில் சுவற்றைத் துளையிட்டு கொள்ளை அடிக்க முயன்ற இருவர் சாவகாசமாக மது அருந்திய போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

டாஸ்மாக்கில் ஓட்டையை போட்டு ஆட்டையை போட்டு சிக்கி கொண்ட   திருடர்கள்
 

Tags :

Share via

More stories