விடிய விடிய போதை பார்ட்டி பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல்

by Editor / 04-09-2022 11:21:07pm
விடிய விடிய போதை பார்ட்டி பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல்

பெங்கரூரு நகரின் ஜீவன் பீமாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டலின் விடுதியில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி இன்று அதிகாலை 3 மணி வரை பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. தகவலறிந்த போலீஸ் ஏசிபி ரீனா தலைமையிலான குழுவினர், அந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு நடந்த போதை விருந்தில் பங்கேற்ற 100 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் பார்ட்டியில் பயன்படுத்திய பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஓட்டல் மற்றும் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் மீது ஜீவன் பீமநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo